சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா! 

Photo of author

By Sakthi

சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா!
பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் சாதி பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சீண்டியுள்ளார்.
கடந்த ஜூலை 30ம் தேதி மக்களவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்று கூறினார்.
இந்த வாக்குவாதத்தில் எம்பி அனுராக் தாக்கூர் அவர்கள் சாதி என்பது என்னவென்று தெரியாத நபர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு விளக்கம் அளித்த எம்பி அனுராக் தாக்கூர் அவர்கள் “நான் பொதுவாகத்தான் கூறினேன். யாரையும் வேண்டுமென்றோ அல்லது குறிப்பிட்டோ கூறவில்லை” என்று கூறினார்.
இதையடுத்து மக்களவையில் இராகுல் காந்தி அவர்களின் கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள அஸ்ஸாம் மாநிலத்தின். முன்னாள் முதல்வரும் பாஜக கட்சியின் மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா அவர்கள் “மக்களிடம் சாதியை பற்றி கேட்டு அறியாமல் எவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது குறித்து இராகுல் காந்தி அவர்கள் இந்திய நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் அவர்கள் “ராகுல் காந்தி அவர்களுக்கு அவருடைய சாதி என்ன என்பது குறித்தே தெரியாது. அவருடைய தாத்தா ஒரு முஸ்லிம். அவருடைய பாட்டி பார்சி. இராகுல் காந்தி அவர்களின் அம்மா கிறிஸ்தவர் ஆவார். இப்படி இருக்கும் நிலையில் இராகுல் காந்தி அவர்கள் நாட்டு மக்களின் அனைவருடைய சாதியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் அவர்கள் மேலும் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது ராகுல் காந்தி அவர்களின் மார்பிங் செய்த புகைபடத்தை நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மார்பிங் செய்யப்பட்ட ராகுல் காந்தி அவர்களின் புகைப்படத்தில் ராகுல் காந்தி அவர்களுக்கு குல்லா அணிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் நெற்றியில் மஞ்சளும் குங்கமும் பூசப்பட்டு இருக்கின்றது. மேலும் ராகுல் காந்தி அவர்களின் கழுத்தில் சிலுவையும் தொங்கவிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தின் கீழ் ஹிந்தி மொழியில் “மக்களிடம் சாதியை பற்றி கேட்காமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இராகுல் காந்தி அவர்கள் விரும்புகிறார்” என்று கங்கனா ரனாவத் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து எம்பி கங்கனா ரனாவத் அவர்கள் பதிவிட்டுள்ள இந்த பதிவுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எம்பி கங்கனா ரனாவத் அவர்களின் இந்த பதிவு தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.