குழந்தையை மீட்க சென்று கிணற்றில் விழுந்த மக்கள்! அரசு தீவிர பணி!

0
125
People who went to rescue the baby and fell into the well! Government serious work!
People who went to rescue the baby and fell into the well! Government serious work!

குழந்தையை மீட்க சென்று கிணற்றில் விழுந்த மக்கள்! அரசு தீவிர பணி!

மத்திய பிரதேச மாநிலத்தில் விதிஷா மாவட்டத்தில், உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில், குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது. அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதன் காரணமாக இடிந்து விழுந்தது.

அதனால் கிணற்றை ஒட்டி சுற்றி நின்று கொண்டு இருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டனர். அதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 15 பேரை மீட்கும் பணிகள் வேகமாக தற்போது நடைபெற்று வருகிறது. அதே சமயம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், தெரிவித்துள்ளார்.

Previous articleதிருமண தடையா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!
Next articleராணுவ ரகசியத்தை இந்த நாட்டில் கூறியதால் 2 பேர் கைது !