தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை! கல்வி தகுதி என்ன தெரியுமா?

Photo of author

By Sakthi

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை! கல்வி தகுதி என்ன தெரியுமா?

Sakthi

Perambalur civil supplies corporation தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பருவகால பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

காலியிடங்கள் -28

பட்டியல் எழுத்தர்-07

உதவுபவர்-14

காவலர்-09

பட்டியல் எழுத்தர்

கல்வித் தகுதி:பி.எஸ்சி ,பிஇ

வயதுவரம்பு- 1-7-2022 அன்று விண்ணப்பம் செய்தவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் எஸ்சி, எஸ்டி, பிரிவை சேர்ந்தவர்கள் 37 ஆகவும், பி சி, எம் பி சி, பிரிவை சார்ந்தவர்கள் 34 ஆகவும் இருக்க வேண்டும்.

ஊதியம்-5,285+3499

அகவிலைப்படி மற்றும் போக்குவரத்து படி 120 ரூபாய்.

உதவுபவர்

கல்வி தகுதி- +2 தேர்ச்சி

வயதுவரம்பு- ஜூலை மாதம் ஒன்றாம் தேதி விண்ணப்பித்தவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ் சி, எஸ் டி, பிரிவை சார்ந்தவர்கள் 37 ஆகவும், பிசி, எம் பி சி, பிரிவை சேர்ந்தவர்கள் 34 ஆகவும், இருக்க வேண்டும்.

ஊதியம்- 5,218+3,499

அகவிலைப்படி மற்றும் போக்குவரத்து படி 100 ரூபாய்.

காவலர்

கல்வித் தகுதி– எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயதுவரம்பு- ஜூலை மாதம் 1ம் தேதி விண்ணப்பம் செய்தவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிரிவை சார்ந்தவர்கள் 37 வயதாகவும், பிசி, எம் பி சி, பிரிவை சார்ந்தவர்கள் 34 ஆகவும், இருக்கலாம்.

ஊதியம்– 5,218+ 3,499

அகவிலைப்படி மற்றும் போக்குவரத்து படி 100 ரூபாய்.

பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்ய வேண்டிய முகவரி- இணையவழியின் மூலமாக பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது விண்ணப்பதாரர் உரிய சான்றுகளுடன் துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், துறைமங்கலம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். 30-9-2022 அன்று மாலை 5 மணி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.