மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் ஆபர்; உடனே விண்ணப்பிக்கலாம்!!

0
16

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் சனிக்கிழமை ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்று வட்டார மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்று பயன்பெறும் சூழல் உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைப்பதற்காக மாதக் கடைசி வியாழக்கிழமை தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்தப்படுகின்றது. முதல் கட்டமாக இந்த முகாமில் அடையாள அட்டை பெற வரும் நபர்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் 4, முன் மருத்துவம் பார்க்கப்பட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

மாற்றம் திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்கவும், பேருந்து பயண அட்டை மற்றும் ரயில் பயண அட்டை பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து ரயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு சலுகை வழங்கப்படும் நிலையில் தேசிய அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது அதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous articleஜெயிலர் 2 படத்துக்கு பிறகு தலைவர் ரெஸ்ட் எடுக்க போறாராம்? காரணம் இதுதான்!!
Next articleராகுல் காந்தியின் படை எதிர்ப்பு பேச்சு!!இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது!!