இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் சேர்த்தார்.
அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் சார்பாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை சேர்த்தது, இதனால் 70 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது இந்திய அணி. புஜாரா 9 ரன்களுடனும், விராட் கோலி 14 ரன்களுடனும், ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், ஆட்டம் முடிவடைந்தவுடன் செய்தி நிறுவனத்திடம் உரையாற்றிய தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் தெரிவித்ததாவது விராட் கோலியும், புஜாராவும், தான் எங்களுக்கு தலைவலியை உண்டாக்குகிறார்கள். என்று கூறினார் காலையில் மிக விரைவில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதுதான் எங்களுடைய இலக்கு. ஆனால் தற்போது களத்தில் இருக்கின்ற விராட் கோலி மற்றும் புஜாரா உள்ளிட்டோர் சில போட்டிகளில் எங்களுக்கு தலைவலியை உண்டாக்கி விட்டனர் என்று கூறியிருக்கிறார்.