கும்பகோணம் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! நிர்வாகிகள் படையெடுப்பால் பரபரப்பு!

0
169

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேல காவேரி பகுதியைச் சார்ந்தவர் சக்கரபாணி 2017 ஆம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மாலதி,மகன் இனியன் உள்ளிட்டோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வெளியே சத்தம் கேட்ட நிலையில், சக்கரபாணி எழுந்து சென்று பார்த்த போது வாசலில் பெட்ரோல் பாட்டில் திரியுடன் உடைந்த நிலையில் கிடந்திருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவை சார்ந்தவர்கள் சக்கரபாணி வீட்டிற்கு படையெடுத்தனர். அதோடு சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா, ஏ. டி.எஸ்.பி சுவாமிநாதன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா, பாஜக வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகிறார்கள். இதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous article2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் வரும்! பிஜேபியை தொடர்ந்து அதிமுகவும் ஆருடம்!
Next articleஎலான் மஸ்க் எடுத்த வாக்கெடுப்பு! மீண்டும் செயல்பட தொடங்கிய டிரம்பின் ட்விட்டர் கணக்கு!