பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!

Photo of author

By Hasini

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!

Hasini

Petrol tanker explodes Hundreds killed!

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!

ஆப்பிரிக்கா நாட்டில் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டில் ப்ரீ டவுன் தலைநகரில் ஒரு பெட்ரோல் பங்கில், எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மோதியுள்ளது. அதன் காரணமாக அங்கு மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் இதுவரை 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க் அருகே நடந்த இந்த கோர விபத்தில் அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கு ஒன்றும் வெடித்து உள்ளதாகவும், தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ  ட்வீட் செய்து செய்துள்ளார். அவர் இறந்தவர்களுக்கு இதன் மூலம் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஆதரவாக தமது அரசு தேவையான அனைத்தையும் செய்யும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். மேலும் இந்த விபத்தில் மொத்தம் 80 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகி உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளனர்.