இரட்டை குழந்தைகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

Photo of author

By Hasini

இரட்டை குழந்தைகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

பொதுவாக பிரபலங்கள் என்றாலே மக்களிடையே மிகுந்த ஆர்வம் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் குடும்பம் அல்லது பிள்ளைகள் என்றால் இன்னும் அதிக ஆர்வமாக இருப்பார்கள்.

அப்படி ஒரு புகைப்படம் தான் தடகள வீரரான உசேன் போல்ட்- ன் குடும்பத்தில் தற்போதைய புது வரவான இரட்டை குழந்தைகளின் புகைப்படமும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனையாளர் ஆவார். குறிப்பாக,  தொடர்ந்து 3 முறை  ஒலிம்பிக் (2008, 2012, 2016) போட்டிகளில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஜமைக்காவை சேர்ந்த 34 வயது முன்னாள் தடகள வீரரான உசைன் போல்ட் ஆகும். அவர் மற்றும் அவருடைய மனைவி காசி பென்னெட் ஆகியோர் தந்தையர் தினத்தை முன்னிட்டு தங்களது குடும்ப புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதை உலகத்திற்கு தெரிவித்தனர். அந்த குழந்தைகளுக்கு தண்டர் போல்ட், செயின்ட் லியோ போல்ட் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தை பிறந்த தேதி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த தம்பதிக்கு ஒலிம்பிக் லைட்னிங் என்ற 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.