பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பெண் போலவே  மாறிய நடிகரின் போட்டோஷூட்! வைரலான புகைப்படங்கள்!

Photo of author

By Hasini

பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பெண் போலவே  மாறிய நடிகரின் போட்டோஷூட்! வைரலான புகைப்படங்கள்!

சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். அந்த கால நடிகர்கள் ஆன எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இந்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ், பிரசாந்த், விஜய், அஜித், வடிவேலு, விவேக் வரை அனைத்து நடிகர்களும் பெண் வேடமிட்டு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதே போல பல்வேறு காமெடி நடிகர்கள் கூட அந்த கதாபாத்திரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழில் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கார்த்தி பெண்களை பெருமைபடுத்தும் விதமாக வரலாற்றில் இடம்பிடித்த வீரமங்கைகளின் பெருமையை எடுத்துக் காட்டும் வகையில் பெண் வேடமிட்டு போட்டோ ஷூட் ஒன்று நடத்தி உள்ளார். அவர் இவ்வாறு செய்து இருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நகைச்சுவை நடிகர் பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்று நேற்று நாளை படத்தில் சயின்டிஸ்ட் ஆக வரும் நபர் தான் கார்த்தி. இவர் பல வருடங்களாக சினிமா துறையில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகரும், ஸ்டாண்டப் காமெடியனுமான கார்த்திக் குமார் குழுவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இவர் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான சர்வம் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிக்கும் படங்களில் இவரது நடிப்பு நிச்சயமாக கவனிக்கப்படும்.

அந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தார். குறிப்பாக நண்பன், மதராசபட்டணம், ராஜா ராணி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகவும் ரசிக்கும்படி இருக்கும். அதிலும் குறிப்பாக இன்று நேற்று நாளை படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்த சூழ்நிலையில் இவர் வரலாற்று வீர மங்கைகள் ஆன ஜான்சி ராணி, வேலு நாச்சியார், ராணி சென்னம்மா போன்றவர்களைப் போல வேடமிட்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த விஷயத்திற்காக பலர் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அவர் கூறும் போதுபெண்களை பெருமைபடுத்தவே இந்த போட்டோஷூட் என்று கூறினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தகுந்தது. இவர் இறுதியாக விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கமலி from நடுகாவேரி படத்திலும் நடித்திருக்கிறார்.