ஓ.டி.டி தளத்தில் படங்கள் ரிலீஸ்!தயார் நிலையில் ரசிகர்களா?

0
153
Pictures released on OTD site! Fans ready?
Pictures released on OTD site! Fans ready?

ஓ.டி.டி தளத்தில் படங்கள் ரிலீஸ்!தயார் நிலையில் ரசிகர்களா?

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவிவரும் நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.விவசாயிகள்,சிறு,குறு வணிக வியாபாரிகள்,ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள்,கனரக வாகன ஓட்டுனர்கள்,கால் டாக்ஸி ஊழியர்கள்,பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள்.தொழிற்சாலை ஊழியர்கள்,நடை பாதை கடைகள் என பலதரப்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபலங்களும் இதற்கு விதி விலக்கில்லாமல் ப்ரோடுயூசர்கள், தயாரிப்பாளர்கள்,டைரக்டர்கள்,நடிகர்,நடிகைகள்,துணை நடிகர்,நடிகைகள் என  அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.கோடிகளை அள்ளி குவித்த திரையரங்க உரிமையாளர்கள் கொரோனா கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் அதிரடி நடவடிக்கையாக ஐம்பது சதவிகித பணியாளர்களுடனும்,ஐம்பது சதவிகித மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினால் பெரிதும் அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.எனவே தொழில்களை அடுத்த கட்ட வியாபாரத்திற்கு எப்படி நகர்த்தலாம் என்று பல்வேறு யோசனைகளை செய்து வருகின்றன. அதன் முதல் கட்டமாக நடிகர் சூர்யா ப்ரோக்டக்சனில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் 2019  ம் ஆண்டு முதன்முதலில் வெளிவந்தது.அதனை தொடர்ந்து சில,பல பிரச்சினைகளை திரையுலகம் சந்தித்தாலும் தற்போது சுமுகமாக போகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மீண்டும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஓ.டி.டி யில் படங்கள் வெளியிட ஆரம்பிக்கலாம் என பேச்சு வார்த்தைகள் போய்கொண்டிருக்கும் நிலையில் தனுஷின் ஜெகமே தந்திரம் அடுத்த மாதம் வெளியிடப்படுவதாக  அதிகார பூர்வ தகவல்கள் வெளி வந்துள்ளது.மேலும் மக்கள் செல்வன் என்று மக்களிடையே பெயர்வாங்கிய விஜய்சேதுபதியின் மலையாள நடிப்பில் 19 (1) (ஏ) என்ற படத்தையும் வெளியிட முடியு செய்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்து இருந்தாலும் கொரோனா தாக்கத்தின் காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைத்துள்ளனர்.எனவே இந்த திரைப் படமும் விரைவில் ஒ.டி.டி. மூலம் திரையிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் நித்யா மேனன்,இந்த்ரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.இந்த படத்தை வி.ஸ்.இந்து இயக்கி உள்ளார்.இதே போல் தமிழில் மக்கள் செல்வன் நடித்த துக்ளக் தர்பார் என்ற படமும் விரைவில் ஓ.டி.டி.யில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!
Next articleதமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த விஜயகாந்த்!