இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வருகிறது.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தற்போது இந்த திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு மையம் அனுமதி அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாக காண்போம் :
இந்த பைபர் ஆப்டிக் கேபிள் திட்டத்திற்கு சென்னை அந்தமான் நிக்கோபர் தீவுகளை இணைக்கும் பெயரான அதாவது(Chennai-Andaman&Nicobar Islands) CANI (கேணி)என்ற பெயர் வைத்துள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வேகமான இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.முக்கியமாக அந்தமானில் “சீனா ஆதிக்கம் செய்யக்கூடாது” என்பதற்காகவே அங்கு இணையவசதியையும் மற்ற வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
சென்னையுடன் போர்ட் பிளேயர், லிட்டில் அந்தமான், கார் நிகோபார், காமோர்தா, கிரேட் நிக்கோபார், ஹாவ்லாக், லாங் மற்றும் ரங்கட் ஆகிய தீவுகளை பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணைக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் 100Gb வேகத்தில் இணையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திட்டத்தின் படி எட்டு தீவுகளையும் சென்னை உடன் இணைக்க கடலுக்கு அடியில் 2200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் அமைக்கப்பட உள்ளது.இதற்கு ஜப்பானை சேர்ந்த ANEA கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இன்னும் மூன்று வருடங்களில் இந்த திட்டம் செயலுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணையம் வழங்கப்படுவது மிகவும் பாதுகாப்பான திட்டம் என்று கூறப்படுகிறது.