மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரையம் உண்டாகும் நாள்!

Photo of author

By Selvarani

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரையம் உண்டாகும் நாள்!

Selvarani

Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரையமும் அலைச்சலும் உண்டாகும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரையமும் அலைச்சலும் உண்டாகும் நாள். காலையில் சந்திர பகவான் அயன சயன ஸ்தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் உண்டாகும். மதியத்திற்கு பிறகு சந்திர பகவான் ஜென்ம ராசிக்கு வருவதால் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிதி அனுகூலமாக இருக்கும்.

கணவன் மனைவியுடைய பிரச்சினைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்கள் மீது கோபத்தை காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக புது முயற்சிகளை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒரு வித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில செலவுகள் உண்டாகும்.