மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

Photo of author

By Selvarani

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மலரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கைகளை பெறுவார்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் சிலருக்கு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில செலவுகளை காணலாம்.

அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்து மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடைய அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.