மீனம் – இன்றைய ராசிபலன்! யோகங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
181
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் – இன்றைய ராசிபலன்! யோகங்கள் அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவானோடு சனீஸ்வர பகவானும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மிக அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளிடம் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

 

வருமானம் சிலருக்கு இரட்டிப்பாகும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் சிலருக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எல்லா விஷயங்களிலும் அருமையாக செயல்பட்டு வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

 

மாணவர் மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எதிர் பாராத ஒரு வருமானம் வந்து சேரலாம்.

 

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சியாக இருக்கும் நாள்!!
Next articleஉங்கள் கிட்னியில் கல்லா? அதை கரைக்கும் வழிமுறைகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here