மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியமும் உண்டாகும் நாள்!!

0
125
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியமும் உண்டாகும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியம் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் உண்டாவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு முக்கிய திருப்பங்கள் உண்டாக்கலாம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செய்யும் சில பெண்கள் நினைத்த காரியங்களை அருமையாக செய்து காட்டுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கண்டிப்பாக கிடைக்கும் ‌.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இணையான நாளாக அமையும்.

author avatar
Selvarani