மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்!!
மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள். சந்திரபகவன் ராசிக்குள்ளே இருப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு ஊடல்கள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது.
வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வித குழப்பங்கள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களை எடுக்கும் வேலைகளில் அமைதி காப்பது நல்லது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.