மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!

Photo of author

By Hasini

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!

கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தொற்றின் காரணமாக அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், மத்திய, மாநில அரசுகள் வலியுருத்தி வருகின்றன.

தற்போது முழு ஊரடங்கின் மூலம் தமிழகத்தில் சிறிதளவு குறைந்துள்ளது.எனினும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொற்றுக்கு சிகிச்சை பெறலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில், தொற்றின் காரணாமாக ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அதிநவீன வசதிகளோடு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி முதல் மதுரை பேரையூர் மள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி கொரோனா தொற்றால்  நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்..

இந்நிலையில் இன்று காலை அவர் படுக்கைக்கு அருகே இருந்த மின்விசிறி திடீரென பழுதாகி படுக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாள் தலையில் விழுந்தது.இதில் படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.