ADMK BJP: இன்னும் 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் திராவிட கட்சிகள் தொடங்கி, சிறிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் பணியில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தனது அடுத்த கட்ட வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல், மற்ற கட்சிகளை விட அதிமுக-பாஜகவிற்கு மிக முக்கியம் எனலாம். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவும், தமிழகத்தில் நிலைபெற முடியாமல் தவிக்கும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த சமயத்தில் பாஜக அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் பாஜக தலைமை பியூஷ் கோயலை நியமித்துள்ளது. இவர் இன்று சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தும், பாஜகவிற்கான தொகுதி பங்கீடு குறித்தும் விரிவாக கலந்துரையாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல், இபிஎஸ் முதல்வராக இருப்பதன் காரணமாக தான் கூட்டணியில் இவ்வளவு பிரச்சனை முளைத்திருக்கிறது.
இதனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளரிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்த்து அவர்களுக்கு உரிய தொகுதிகளும், முக்கிய பொறுப்புகளும் வழங்க வேண்டுமென இபிஎஸ்யிடம் பியூஷ் கோயல் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றை ஏற்று கொண்டாலும் இபிஎஸ்க்கு கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி மதிப்பு குறைந்து விடும். இதனால் இபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.