BJP ADMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தவெக, நாதக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மாநில கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் முழு முயற்சியில் இறங்கியுள்ளன. அந்த வகையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ள பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள போகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பே உறுதியான இந்த கூட்டணி அடுத்து எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிர ஆலோசனையில் உள்ளது. மேலும் பாஜகவிற்கு உண்டான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு டெல்லி மேலிடம் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக தேர்தல் நிலவரத்தை ஆராய, தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்துள்ள பாஜக அவர் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்ததாக ஜனவரி முதல் வாரத்தில் பியூஷ் கோயல் மீண்டும் சென்னை வருகை தரவுள்ளார். இதில் பாஜகவிற்கு 60 தொகுதிகளுக்கு மேலே ஒதுக்க வேண்டும் என்றும், ஒபிஎஸ் மற்றும் தினகரன் இருவரையும் அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் விஜய் கட்சிக்கு செல்வதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து விவாதிப்பது பேசு பொருளாகியுள்ளது.