திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
247
#image_title

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

 

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது.

 

நடிகர் மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் மொழியில் திரிஷ்யம் திரைப்படம் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

 

பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் கௌதமி அவர்களும் நடித்திருந்தனர். தமிழில் பாபநாசம் திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் தமிழில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து திரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் மலையாளத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தமிழ் மொழியில் இன்னும் திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் ரீமேக் செய்யப்படாமல் இருக்கின்றது.

 

இந்த நிலையில் திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தை உருவாக்க இயக்குநர் ஜித்து ஜோசப் திட்டமிட்டுள்ளார். முதல் இரண்டு பாகத்தில் நடித்த நடிகர்.மோகன்லால் மற்றும் நடிகை மீனா இருவரும் மூன்றாவது பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் அந்தந்த பிரபல நடிகர்களை இயக்குவதற்கு இயக்குநர் ஜித்து ஜோசப் திட்டமிட்டுள்ளாராம். ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் திரிஷ்யம் 3 திரைப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

 

Previous articleஉலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023!  வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!!
Next articleபலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!!