கார் வாங்க நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீபாவளி ஆஃபர்!

Photo of author

By Sakthi

கார் வாங்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தாலும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையில் எடுத்திருக்க மாட்டீர்கள். ஆனால் தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்துக்கொண்டு கார் வாங்கிட வேண்டும் என்று நினைப்புடன் நீங்கள் செயல்பட ஆரம்பித்திருப்பீர்கள்.

கார் வாங்குவதற்கு முழுமையான பணம் நம்மிடம் இல்லாத சூழ்நிலையில் வங்கிகளில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு கார் கடன்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக எலக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு வங்கிகள் சிறப்பான சலுகைகளுடன் கடன் வழங்குகின்றன என்பதை அனைவரும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். முன்னணி வங்கிகளான எஸ்பிஐ ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி பஞ்சாப், நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன.

புதை வடிவ எரிபொருள்களின் மூல ஆதாரங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன என்பதும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இத்துடன் பெட்ரோல் டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த மாசுபாடு உண்டாகிறது.

இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காணும் இடத்தில் தான் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதை போல மத்திய அரசு சார்பிலும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற காரணங்களை முன்வைத்து முதல் முறை கார் வாங்க நினைப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற தேர்வாக எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. ஏற்கனவே கார்களை வைத்திருப்பவர்களும் கூட அடுத்த முறை கார் வாங்கும் போது அது எலக்ட்ரிக் வாகனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமான புதிதில் அவற்றின் விலை மிகக் கூடுதலாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதனை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தார்கள். ஆனால் டாட்டா மோட்டார்ஸ் மகேந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி என்று அடுத்தடுத்து பல நிறுவனங்கள் சார்பில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், அவற்றின் நிலையும் குறைய தொடங்கியுள்ளது.

எலக்ட்ரிக் கார் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 30 பேஸ் பாயிண்ட்ஸ் வரையிலும் வங்கிகள் சார்பாக சலுகை வழங்கப்படுகிறது உதாரணத்திற்கு பேங்க் ஆப் பரோடா சார்பாக 0.25% வழங்கப்படும் எஸ்பிஐ சார்பாக 0. 20 பர்சன்டேஜ் பாயின்ட்ஸ் வரையிலும் ஆபர்கள் வழங்கப்படுகின்றன.

எஸ்பிஐ வங்கியில் வழக்கமாக கார் லோன் என்பது 7.85 சதவீதம் முதல் 8.65% வட்டி வரையிலும் வழங்கப்படும். இந்த நிலையில் பசுமை வாடிக்கையாளர்களுக்கு 7.95% முதல் 8.30 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.