வீட்டில் வளர்க்க கூடாத செடிகள் மற்றும் மரங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

Photo of author

By Priya

Veetil valarka kudatha maram: பொதுவாக ஒரு புது வீடு கட்டினால் கட்டாயம் வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்து தான் கட்டுவோம். வீட்டில் எந்த அறை எப்படி இருக்க வேண்டும். வீட்டில் எங்கு அறை அமைக்க வேண்டும் போன்ற அனைத்தையும் வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்து நாம் வீடு கட்டுவோம்.

சிலர் வாஸ்து பார்த்து சில பொருட்கள், செடிகள் என்று வாங்குவார்கள். அதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மற்றவர்களின் கண்திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் போன்ற காரணங்களுக்காக வாஸ்து பார்த்து சில விஷயங்களை நாம் செய்வதுண்டு.

நம் வீட்டில் வளர்க்கும் வாஸ்து செடிகள் நம் வீட்டின் செல்வதிற்கும், ஐஸ்வர்யத்திற்கும் காரணமாக அமையும். மேலும் நாம் வைக்கும் மரங்கள் ஒரு சிலருக்கு பாதகங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் வீட்டில் கட்டாயம் வளர்க்க கூடாத செடிகள் மற்றும் மரங்களை பற்றி இந்த பதிவில் (veetil valarka kudatha maram matrum sedigal) காண்போம்.

வளர்க்க கூடாத செடிகள் மற்றும் மரங்கள்

தானம், தர்மம் போன்று ஒரு விதையை விதைப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. ஒருவர் அவர் வாழ்க்கையில் எவ்வளவு செடி, மரங்களை நடவு செய்து வளர்க்கிறாரோ அந்த அளவிற்கு அவரின் புண்ணியக்கணக்கில் சேரும் என்பது ஐதீகம்.

வீட்டு முன்னோர்களின் நினைவாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது ஒரு மரக்கன்றை நடவு செய்தால் நமது பாவக்கணக்கு குறைந்து புண்ணியக்கணக்கில் சேரும். அந்த வகையில் அகத்தியர் வீடுகளில் எந்த மரங்களை வளர்க கூடாது என்று அவர் எழுதிய அகத்தியர் புனைசுருட்டு என்னும் நூலில் எழுதியுள்ளார்.

வீட்டில் முருங்கை மரம் அனைவரும் வளர்ப்பார்கள். ஆனால் முருங்கை மரத்தை வீட்டின் வாசலுக்கு முன்பு வளர்க்க கூடாது. முருங்கை மரத்தின் நிழல் விழாதாவாறு தான் இந்த மரங்களை வீட்டின் வெளிபுறமாக வளர்ப்பார்கள்.

மேலும் அகத்தியர் கூறிய மரங்கள், செடிகளான அகத்தி, பனை, நாவல், அத்தி மரம்,புளிய மரம், கருவேல மரம், வில்வ மரம்,உதிரவேங்கை, உருத்திராட்சம் போன்ற மரங்கள் எல்லாம் ஸ்தல விருட்சங்கள். அதாவது இவை எல்லாம் கோயில் தலங்களில் கடவுளுக்கான மரங்களாக கருதப்படுகிறது.

மேலும் அரச மரம் பிள்ளையார், வில்வ மரம் சிவபெருமானுக்கு உகந்த மரமாக கருதப்படுகிறது. மேலும் முக்கியமாக இந்த வகை மரங்களின் வேர்கள் எல்லாம் கட்டிடங்களையும் துளைத்துக்கொண்டு வளரும் மரங்களாகும். இந்த வகை மரங்கள் வீட்டின் அருகில் இருந்தால் அதன் வேர்களால் வீட்டிற்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.

அடுத்ததாக எருக்கன் செடி, ஊமத்தை, பருத்தி போன்ற செடிகளை வீட்டின் அருகில் வளர்க்க கூடாது. மருத்துவ குணம் வாய்ந்ததாக இருந்தாலும் அவைகளை மருத்துவத்தில் விதிமுறைகளை பின்பற்றி தான் பயன்படுத்துவார்கள். நேரடியாக நாம் செடிகளை தொடும் போது கட்டாயம் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அதனை வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இதை வைத்தால் போதும்…!! கஷ்டங்கள் எல்லாம் பறந்து போய்விடும்…!!