பரபரப்பில் மாணவர்கள்! இன்று வெளியாகிறது பிளஸ்1 தேர்வு முடிவுகள்!

0
344

தமிழகத்தில் மே மாதம் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுவதும் 8,83,882 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். இதில் 4,33,684 மாணவர்களும்,4,50,198 மாணவிகளும், இந்த தேர்வை எழுதியிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாதம் 9ம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நாடைபெற்று நிறைவடைந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் பிளஸ்1 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இந்த தேர்வு முடிவுகளைwww.tnresults.nic.in ,www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் மாணவ, மாணவிகள், தெரிந்துகொள்ளலாம்.

இந்த சூழ்நிலையில், 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்தல் தோல்வியடைந்தாலும் அவர்கள் 12ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 11ம் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களை சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Previous articleஇனி கட்டாயம்  மாஸ்க் போடாவிட்டால்  அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!!
Next articleஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here