விடுபட்ட தேர்வை இன்று எழுதும் பிளஸ் 2 மாணவர்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்போது நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பிற்கான இறுதி தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் விடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வை எழுத உள்ளனர் .தேர்வை எழுத 572 மாணவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்ததை அடுத்து இன்று சென்னையில் 170 பிளஸ் 2 மாணவர்கள் விடுபட்ட தேர்வை எழுத உள்ளனர்.

விடுபட்ட தேர்வை எழுத பிளஸ் 2 மாணவர்கள்  படித்த பள்ளிகளிலேயே தேர்வு  எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment