தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன?

Photo of author

By Pavithra

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன?

இந்தியாவில் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகமிருக்கும்,மகாராஷ்டிரா, தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா, உத்திரபிரதேசம்,டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவலுக்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும், சிகிச்சைகள் பற்றியும்,சுகாதார வசதிகள் பற்றியும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பில் இந்த ஏழு மாநிலங்களில் பங்கு மட்டும் 65% என்று கூறப்படுகிறது.
அதேபோல் நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்த ஏழு மாநிலங்களில் பங்கு 77% என்பது குறிப்பிடத்தக்கது.