பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11வது தவணையாக உதவித்தொகையை விவசாயிகளுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் மத்திய அரசு வழங்கியது. இந்த 11வது தவணை விடுவிக்கப்பட்டது.
10 கோடி விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்கள். இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் சென்ற செவ்வாய்க்கிழமை மத்திய அரசின் நலத்திட்ட விழா நடந்தது.
அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார், அதோடு 10 கோடி விவசாயிகளுக்கான 21,000 கோடி ரூபாய் நிதியை அவர் விடுவித்தார்.
வருடம் தோறும் 4 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தவணைத் தொகையை விவசாயிகள் பெற்றிருக்கிறார்கள். 11வது தவணை தொகையை தொடங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த திட்டத்தில் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிப்பு செய்திருக்கிறது.
இகேஒய்சி அப்டேட் காலக்கெடு
முன்னதாக பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த அப்டேட்டை செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31-ஆம் தேதி வரையில் மத்திய அரசு நீட்டிப்பு வழங்கியிருந்தது
. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலினடிப்படையில் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்ட பயனாளிகள் இந்த இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இகேஒய்சி அப்டேட் செய்வது எப்படி?
முதலில் அதிகாரப்பூர்வ வலைதளமான pmkisangov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும் அங்கே ஹோமேஜ் பக்கத்தில் வலது புறத்திலுள்ள இகேஒய்சி ஆப்ஷனை தேர்வுசெய்யவும்.
இந்த இகேஒய்சி பேஜ் உள்ளே சென்ற பின்னர் உங்களுடைய ஆதார் எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். கேப்ட்சா கோடு என்டர் செய்து search கொடுக்க வேண்டும் தற்போது உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிடவும்.
தேவையான விவரங்கள் அனைத்தையும் கொடுத்த பிறகு கெட் ஒ.டி. பி என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும், தற்போது நீங்கள் ஏற்கனவே வழங்கிய மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் இதனை குறிப்பிட்ட இடத்தில் பதிவு செய்யவும்.
இதை செய்த பிறகு இகேஒய்சி நடவடிக்கை நிறைவடையும், இதனை நீங்கள் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுடைய அடுத்த தவணை பணம் வந்து சேராது என சொல்லப்படுகிறது.
பயனாளி பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை எவ்வாறு சரி பார்ப்பது?
Pmkisan.gov.in இணையதளத்திற்கு சென்று ஹோம் பேஜ் பக்கத்திலுள்ள விவசாயிகள் கார்னர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள பயனாளிகள் பட்டியல் என்பதை தேர்வு செய்யவும், இங்கே உங்களுடைய ஆதார் எண், திட்ட பயனாளி எண் அல்லது மொபைல் எண் என்று ஏதாவது ஒன்றை நீங்கள் குறிப்பிட வேண்டும்.
இந்த விவரங்களை குறிப்பிட்ட பிறகு கெட் டேட்டா என்ற ஆப்ஷனை தேர்வுசெய்து தற்போது உங்களுடைய பயனாளி நிலை என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள இயலும்.