அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

Photo of author

By Hasini

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

Hasini

PM meets National Security Advisers of Neighboring Countries

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

ரஷ்யா, தஜிகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உடன் இன்று பிரதமர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இவர்களிடம் ஆப்கானிஸ்தானின் விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி மேற்குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் வந்து இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இவ்வாறு கூறினார்.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அந்த நாட்டிற்கு மட்டுமல்ல, அண்டை நாடுகளான நமக்கும், பிராந்தியத்தில் உள்ள மற்ற அனைத்து நாடுகளுக்கும் பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவைதான் என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான்களின் அரசு இந்தியா நடத்தும் இந்த கூட்டம் குறித்து நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.