காஷ்மீரில் ரூ2,027 கோடி செலவில் சுரங்கப்பாதை! பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்!

Photo of author

By Sakthi

காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை எப்போதும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால் காஷ்மீர் மாநில காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும், எப்போதும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அதோடு காஷ்மீர் மக்கள் எந்த சமயத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருவார்கள்.

ஆனால் அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370 ஆவது சட்டப்பிரிவு பாராளுமன்றத்தில் நீக்கப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் அந்த மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த பல சலுகைகள் திரும்பப் பெறப்பட்டிருந்தனர்.மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் பலவிதமாக நமக்கு தொந்தரவு கொடுக்க முயற்சித்தது. ஆனால் உலக நாடுகள் இதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் அந்த நாடு அனைத்தியாகிப்போனது.

மத்திய அரசின் இந்த செயலால் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் வெகுவாக குறைந்து விட்டனர். அதனால் தற்போது அந்த மாநிலம் அமைதியை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகொண்ட்ப்பகுதியிலிருந்து பனிக்கால் வரையில் 8.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2,027 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகவுள்ளது.

இந்த சூழ்நிலையில், காஷ்மீருக்கு ஒரு நாள் பயணமாக வரும் 14-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். சம்பா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று கொண்டு பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், இந்த சுரங்கப்பாதையையயும் அவர் காணொளி மூலமாக திறந்து வைக்கிறார். இருவழி போக்குவரத்துக்காக இரட்டை குழல் சுரங்கப் பாதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் காரணமாக, குவாசிகுண்ட்- பனிகால் இடையேயான பயண தூரம் 16 கிலோமீட்டர் தூரம் குறையும் என சொல்கிறார்கள். அதோடு பயண நேரமும் 1 மணி நேரமாக குறைவதற்கான வாய்ப்புண்டு என்கிறார்கள்.

இந்த சுரங்க பாதையை தவிர்த்து 32 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களின் பிரதமர் நரேந்திர மோடியும் ஆரம்பித்து வைக்கிறார். இதன் மூலமாக 4,00000 அதிகமானோர் நேரடி வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.