பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்!

Photo of author

By Sakthi

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்!

Sakthi

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவர் பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

எப்போதும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்த சூழ்நிலையில், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியது அந்தக் கட்சி.

தமிழக அரசு மட்டுமல்லாமல் பாஜகவினரும் பிரதமரை வரவேற்பதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

அத்துடன் சென்னை முழுவதும் காவி மயமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும், பாஜகவுடன் கூட்டணியிலிருந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட பிரதமருக்கு இப்படி ஒரு வரவேற்பை வழங்கியதில்லை என்று கருத்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள குஜராத் கவுரவ் அபியான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார் அதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம் செய்கிறார்.

நவ்சாரியில் நடைபெறவுள்ள குஜராத் கவுரவ் அபியான் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கே பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.