தமிழகத்தை தொடர்ந்து இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவருக்கு அரசின் சார்பாகவும், தமிழக பாஜகவின் சார்பாகவும், மிகப்பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது.

முந்தைய காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் ஆளாக நிற்பது திமுக தான்.

ஆனால் தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கின்ற நிலையில், இதுவரையில் யாரும் வழங்கிய பிரமாண்டமான வரவேற்பு அந்த கட்சியை வழங்கியிருப்பது அந்த கட்சியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

நேற்று தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாஸ்ரீ கேடிபி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை இன்று காலை அவர் திறந்துவைக்கிறார்.

இதனையடுத்து மாலை காந்தி நகரில் நடைபெறும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களின் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

இந்தநிலையில், பிரதமருடன் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவும் இன்று குஜராத் செல்கிறார். அதோடு குஜராத்தில் 176 கோடி ரூபாய் செலவில் இஃப்கோ நிறுவனத்தால் கட்டப்பட்ட நேனோ யூரியா ஆலையையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.