Minister Sivasankar : ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திய விவகாரம் – அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அதானி குழுமம் 2000 கோடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருப்பதாக குற்றச்சாட்டை அமெரிக்க நீதி மன்றம் நிரூபித்துள்ளது. மேலும் அதானியின் ஊழல் நிறுவனங்களுடன் தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது உள்ளது. அதனை ஆளும் திமுக அரசு விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் “ராமதாசுக்கு வேறு வேலை இன்றி தினமும் ஒரு அறிக்கையை வெளியீடுகிறார்” என கூறியிருந்தார். முதல்வரின் இந்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் பாமக அன்புமணி. மேலும் ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் என முதல்வர் ஸ்டாலின் மீது தங்களது எதிர்ப்புகள் தெரிவித்து இருந்தார்கள்.
எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைச்சர் சிவசங்கர் பேசி இருக்கிறார். அதாவது, அரியலூரில் திமுக வின் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார் அமைச்சர் சிவசங்கர். மேலும் கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாமக அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி இருக்கிறார.
அதாவது, “யார் யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறுவது? முதல்வரின் தரம் என்ன என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும்” என தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அமைச்சர் சிவசங்கர் இவ்வாறு பேசி இருப்பதற்கு பாமக தரப்பில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்கள்.