மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு

Photo of author

By Ammasi Manickam

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் மர்ம நபரால் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையை ஆரம்பித்தனர்.

இந்த நேரத்தில் காவல் துறையினரின் விசாரணை முடிவு தெரிவதற்குள் வழக்கம் போல இதை வைத்தும் அரசியல் செய்ய நினைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதற்கான போலி பரப்புரையில் இறங்கிறனர்.

குறிப்பாக இதற்கு முன்பு அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள வன்னியரசு எதற்கெடுத்தாலும் பாமக மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வது வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்திலும் மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வகையில் விமர்சனம் செய்திருந்தார்.

Vanniyarasu-News4 Tamil Online Tamil News
Vanniyarasu-News4 Tamil Online Tamil News

இதனையடுத்து சில தினங்களில் செருப்பு மாலை அணிவித்த அந்த மர்ம நபரை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அந்த மர்ம நபருக்கும் பாமகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் அடிப்படை ஆதாரம் இல்லாமல் விமர்சனம் செய்த விசிகவினர் மீது பாமக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக வழக்கறிஞர் K.பாலு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

வன்னியரசு மட்டுமல்லாமல் தமிழக அரசால் திறக்கப்பட்ட ராமசாமி படையாட்சியார் மணி மண்டபத்திற்கு மிரட்டல் விடுத்ததற்காக அக்கட்சியை சேர்ந்த மற்றொரு நபர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.