PMK: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 1987 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு வாரம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் வட தமிழக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. போராட்டத்தை நிறுத்த 21 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இரையானார்கள். அதன் பிறகு தமிழகத்தில் திமுக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வரவே 108 சாதியினர்களை உள்ளடைக்கி MBC மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 20 சதவீத இட ஒடுகிடு வழங்க்கப்பட்டது.
இந்த நிலையியல் வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை பிற சாதியினர் MBC கோட்டா மூலம் பெற்று வருகிறார்கள். எனவே வன்னியர்களுக்கு MBC இட ஒதுக்கீடில் இருந்து தனியாக 10,5% என்ற அளவிற்கு உள் ஒதுக்கீடு வேண்டி கடந்த ஆண்டுகளில் பாமகவினர் போராட்டம் நடத்தி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் அதிமுக எடப்பாடி யார் ஆட்சி முடிவுக்கு வரும் போது சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு திமுக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதனால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனை எதிர்க்கும் வகையில் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து 1000 வது நாளான இன்று பாமகவினர் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுத்தால் வருகின்ற தேர்தலில் நிபந்தனை இன்றி திமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என பேசி இருக்கிறார்.