PMK:அதானி ஊழல் விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் பாமகவினர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மின் வாரியத்திற்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்க அதானி குழுமம் முடிவு செய்து. அதற்காக ரூ 2000 கோடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருப்பதாக அமெரிக்க நீதிமன்றம் நிரூபித்துள்ளது. மேலும் அதானியின் ஊழல் நிறுவனங்களுடன் தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது உள்ளது.
அது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும், மேலும் அதானியுடன் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு நேற்று செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் “ராமதாசுக்கு வேறு வேலை இன்றி தினமும் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார் ” என கூறியிருந்தார்.
முதல்வரின் இந்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் பாமக அன்புமணி. மேலும் ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சவுந்தரராஜனை தொடர்ந்து இயக்குனர் தங்கர்பச்சான், நாம் தமிழர் சீமான் முதலியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
மேலும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து நேற்றே வட தமிழகத்தில் போராட்டத்தில் பாமக கட்சியினர் ஈடுபட்டார்கள். எனவே இந்த போராட்டம் மேலும் வலு பெறாமல் இருக்க தமிழக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாமக போராட்டத்தை தடுக்க வலியுறுத்தப்பட்டு இருந்தார்கள். இன்று சேலம், ஆத்தூர் வட்டம், கள்ளக்குறிச்சி,விழுப்புரம் ,கரூர் ,கடலூர்,வேலூர் முதலிய மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்கள்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் பாமகவினர்.எனவே இன்று அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காவல்துறையினர் பாமகவினரை கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.