பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 71 மேலையூர் ஊராட்சியில் கூத்தக்குடி கிளை பாமக நிர்வாகி பொறுப்பாளராக பதவி வகிப்பவர் தான் அப்புனு. இவர் தான் வசிக்கும் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் புகாராக பதிவிட்டுள்ளார்.இதைக்கண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கடந்த 08.05.2020 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் மது போதையில் சென்று அப்புனுவை தாக்கியுள்ளர்.இந்த செய்தி சில தினங்களுக்கு முன்பு நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.
இது பற்றிய செய்தியை படிக்க: புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி செயக்கொடி கணவன் ஸ்டாலின் தான் செய்த தவறை உணர்ந்து பாமக நிர்வாகி அப்புனுவிடம் கடந்த 10.05.2020 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் கூத்தக்குடி கிளை நிர்வாகிகள் சுரேஷ் சண்முகம் , செந்தில் சக்கரை , முருகராசன் ரெங்கநாதன் மற்றும் முருகதாஸ் சங்கர்பாலு இவர்கள் முன்னிலையில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இரு தரப்பையும் சமரசம் பேசி நடவடிக்கை மேற்கொள்ள பாமக நிர்வாகிகள்,உழவர் பேரியக்கம் மற்றும் பாட்டாளி ஊடகப்பேரவை அமைப்புகளின் கிளை, ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய வன்னியர்குல ஷத்திரிய சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த இவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.