புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

Photo of author

By Ammasi Manickam

புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

தண்ணீர் வரவில்லை என்று முகநூலில் புகார் பதிவிட்ட பாமக கிளை செயலாளரை அந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மது போதையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 71 மேலையூர் ஊராட்சியில் கூத்தக்குடி பகுதியில் பாமக கிளை செயலாளர் பதவியை வகித்து வருபவர் தான் அப்புனு என்கிற ஜெயப்பிரகாஷ்.

இவர் தனது தெரு குழாயில் தண்ணீர் வரவில்லை என்று முகநூலில் புகாராக பதிவிட்டதற்கு, மேலையூர் ஊராட்சி மன்ற தலைவி ஜெயக்கொடி அவர்களின் கணவர் ஸ்டாலின் மது போதையில் அப்புனுவை கடுமையாக தாக்கியுள்ளார்.

Stalin

இது சம்பவம் தொடர்பாக திருநீலக்குடியில் காவல் நிலையத்தில் பாமக ஒன்றிய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் புகார் அளித்துள்ளார்கள். ஊராட்சியில் உள்ள பிரச்சனை குறித்து புகார் தெரிவித்த பிரபல அரசியல் கட்சி நிர்வாகியான இவருக்கே இந்த நிலைமை என்றால் அப்பகுதியில் வசிக்கும் சமானியர்களின் நிலை என்னவாக இருக்கும்.