வன்னியர் இட ஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டம்!! ராமதாஸ் அதிரடி  அறிவிப்பு!!

0
153
PMK Ramadoss statement: We will hold a protest across Tamil Nadu on December 24 demanding reservation for Vanniyar seats
PMK Ramadoss statement: We will hold a protest across Tamil Nadu on December 24 demanding reservation for Vanniyar seats

PMK: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 24-ல் தமிழகம் முழுவதும்  போராட்டம் நடத்துவோம் பாமக ராமதாஸ் அறிக்கை.

கடத்த 2020 ஆம் ஆண்டு பாமகவினர் MBC வகுப்பில் உள்ள 20 சதவீதத்தில் இருந்து வன்னியர்களுக்கு என தனியாக  10.5 உள் ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு MBC இடஒதுக்கீடு இருந்து 10.5 உள் ஒதுக்கீடு வழங்கினார்.

பிறகு திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கியது. அதன் பாமகவினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  தாக்கல் செய்தார்கள்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது என அறிவித்தது. போதுமான தரவுகள் இருக்கும் பட்சத்தில் வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு வழங்கலாம் என  கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் தீர்ப்பு வழங்கியது.

எனவே  தீர்ப்பு வழங்கிய வருகின்ற டிசம்பர்-24 ஆம் நாளுடன்  1000 நாட்கள் ஆகிறது. எனவே இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் ஸ்டாலின் அரசை எதிர்த்தும், வன்னியர் இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 24-ல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ராமதாஸ். மேலும், போராட்டம் தொடர்பான பாமக மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவிப்பு கொடுத்து இருக்கிறார்.

Previous articleஅஸ்வினை அணியை விட்டு நீக்குங்கள்..ஹர்பஜன் சர்ச்சை பேச்சு!! தனிப்பட்ட கோபம் தான் காரணமா??
Next articleமகளிருக்கு இலவச பஸ் பயணம் தொடருமா? தணிக்கை துறை ஆய்வு!!