ADMK PMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக-பாஜக கூட்டணி, திமுக- காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை தங்களுடைய கூட்டணியை பலமாக வைத்திருக்கிறது. மீதமிருக்கும் மூன்றாம் நிலை கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் திராவிட கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்துடனான பேச்சு வார்த்தையை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், பாமகஉடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பாமக தற்போது இரண்டாக பிரிந்துள்ளதால், இருதரப்பினரிடையேயும் அதிமுக பேசி வருகிறது. பாமக தனது தேர்தல் வரலாற்றிலேயே அதிக தொகுதிகளை வென்ற கூட்டணி என்றால் அது அதிமுக கூட்டணி தான். இந்நிலையில் கூட்டணி குறித்து ராமதாஸிடம் அதிமுக தலைவர் இபிஎஸ் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்.
இவரை தொடர்ந்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜந்த் பாண்டா அன்புமணியிடம் பேசியுள்ளார். ராமதாஸ் இபிஎஸ்யிடம் 25 தொகுதிகளுக்கு மேல் கேட்டதாகவும், அன்புமணி பைஜந்த் பாண்டாவிடம் 30 தொகுதிகளுக்கு மேல் உறுதியாக கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாஜக அதிமுகவிடம் கொங்கு மண்டலத்தை கேட்டு வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், பாமகவும் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருப்பது இபிஎஸ்க்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
இது தொடர்ந்தால் அதிமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கூட்டணியை தவிர்த்தால் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.