PMK-TVK:தேர்தல் நேரத்தில் தவெக உடன் கூட்டணி குறித்து பேசுவோம் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி பதில்.
தமிகத்தில் புதியதாக கட்சி தொடங்கிய விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது . அந்த மாநாட்டில் தவெகவின் அரசியல் எதிரியாக திமுவை நேரடியாக அறிவித்தார் மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முழுமையாக எதிர்க்கும் வகையில் பேசியிருந்தார். மேலும் அதிமுகவை பற்றி எவ்வித விருப்பு வெறுப்பு பற்றியும் பேசவில்லை.
மேலும் 2026-ல் தவெக ஆட்சி அமைக்கும் என்றும் தவெக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்பதை அறிவித்தார் தவெக தலைவர் விஜய் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்புமணி ,2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும். கூட்டணி ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி பங்கு பெரும் எனவும், தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் விஜய் தவெக கட்சியுடன் பாமக கூட்டணி இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலாக தேர்தல் நேரத்தில் தவெகவுடன் கூட்டணி தொடர்பாக பேசப்படும் என்று பதில் அளித்து உள்ளார். இதை வைத்து பார்க்கும்போது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமகவுடன் ,தவெக கூட்டணி அமைக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.