PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பிரச்சனையின் காரணமாக நிறுவனர் ராமதாஸ் மகன் என்று கூட பாராமல் அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம், கட்சியின் தலைவர் மற்றும், சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாக ராமதாஸ் தரப்பு புகார் அளித்திருந்தது. இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்க, ராமதாஸ் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண வந்த அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டததாக கூறப்படுகிறது.
இவரை தொடர்ந்து பலரும் ராமதாசை காண வந்து செல்கின்றனர். இந்நிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், உரையாற்றிய அன்புமணி, மருத்துவர் ஐயா நலமாக தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி என்னை வரவழைக்கிறார்கள். யார் யாரோ வந்து ஐயாவை பார்த்து விட்டு செல்கிறார்கள். அவர் என்ன எக்ஸிபிஷனா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நான் இருக்கும் போது யாரும் ஐயா கிட்ட கூட வர மாட்டார்கள். ஆனால் தற்போதைய நிலைமை அப்படி இல்லை. ஐயாவின் அருகில் இருக்கும் சிலரால் அவர் உயிருக்கு ஆபத்து வந்தால், நான் யாரையும் சும்மா விட மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இவரின் இந்த ஆவேச பேச்சு அன்புமணி மீண்டும் ராமதாசுடன் இனைவதற்கான பாலமாக பார்க்கப்படுகிறது.