போக்சோ வழக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை! திருப்பூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

0
184

போக்சோ குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனையும்,மற்றொரு வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனையும், விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பெருமாநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் அப்பாஸ் கைத்தறி நெசவுத் தொழிலாளியான இவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி கற்பமமடைந்ததால் பெற்றோர் வழங்கிய புகாரினடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவரை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

வழக்கு விசாரணை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி அப்பாஸுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும், விதித்து நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

மூலனூரைச் சார்ந்தவர் பழனிச்சாமி கட்டட தொழிலாளியான இவர், மனநிலை பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். தாராபுரம் மகளிர் காவல் துறையினர் பழனிச்சாமியை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது .வழக்கில் குற்றவாளி பழனிச்சாமிக்கு சகல காலத்திற்கும் அனுபவிக்கும் விதத்தில் 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்குகளில் அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Previous articleஇந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..
Next articleஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..