தற்பொழுது நஞ்சு கொடி இறக்கப் பிரச்சனை என்பது கர்ப்பிணிகளிடையே அதிகரித்து வரும் பாதிப்பாக இருக்கிறது.முதல் 3 மாதத்திலியே பல பெண்களுக்கு நஞ்சு கொடி இறக்கம் ஏற்படுகிறது.நஞ்சு கொடியானது கருப்பையில் வளரும் குழந்தையின் தொப்புளுடன் இணைந்திருக்க கூடியதாகும்.
இந்த நஞ்சு கொடி இரத்தத்தில் காணப்படும் கழிவுகளை அகற்றும் அகற்றும் வேலையை செய்கிறது.கருவுற்ற பெண்ணின் 7வந்து மாதத்தில் இந்த நஞ்சு கொடி கருப்பையின் மேல் சுவரை நோக்கி நகரும்.இப்படி நடந்தால் தான் பிரசவ காலத்தில் குழந்தை வெளியில் வரும்.
கருப்பை நஞ்சு கொடி மேல் இல்லாமல் கீழே ஜனன அடைத்தபடி இருந்தால் அது நஞ்சு கொடி இறக்கம் என்று சொல்லப்படுகிறது.
நஞ்சு கொடி இறக்கம் யாருக்கு ஏற்படும்?
1)சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள்
2)இரத்த சோகை இருப்பவர்கள்
3)இரட்டை குழந்தை பெற்றவர்கள்
4)40 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள்
5)கருவில் வளரும் குழந்தையின் எடை 3 1/2 கிலோவிற்கு மேல் இருப்பது
நஞ்சு கொடி இறக்கம் இருப்பவர்களுக்கு சிசேரியன் மூலம் மட்டுமே குழந்தை பெற வைக்க முடியும்.இந்த நஞ்சு கொடி இறக்கத்தால் பிரசவத்தின் போது பெண்களுக்கு அதிகவலி ஏற்படும்.அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும்.நஞ்சு கொடி இறக்கத்தால் பிரசவ காலத்தில் சில பெண்களுக்கு உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வெளியேற வாய்ப்பிருக்கிறது.எனவே நஞ்சு கொடி இறக்கம் உள்ள பெண்கள் முன் கூட்டியே பரிசோதனை செய்து கொண்டு பிரசவகாலத்தின் போது உரிய இரத்த இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பெண்கள் தங்கள் 7வது மாதத்தில் நஞ்சு கொடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.நஞ்சு கொடி இறங்கி இருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கருவுற்ற மூன்று மாதத்தில் நஞ்சு கொடி இறக்க பிரச்சனையை சந்திக்கும் பெண்கள் உடலுக்கு அதிகப்படியான ஓய்வு கொடுக்க வேண்டும்.கடிமான உடற்பயிற்சிகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.எனவே நஞ்சு கொடி இறக்க பிரச்சனையை சந்தித்து வரும் பெண்கள் அலட்சியம் கொள்ளாமல் உரிய தீர்வு காண்பது நல்லது.