நடிகை கொடுத்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்!

Photo of author

By Hasini

நடிகை கொடுத்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்!

மலையாள திரை உலகில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் அம்புலி. இவர் தன்னுடைய இரண்டாவது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக உள்ளதாகவும், அதன் காரணமாக தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரை கையில் எடுத்த போலீசார் அம்புலியின் இரண்டாவது கணவர் மற்றும் சீரியல் நடிகருமான ஆதித்யன் ஜெயின் என்பவரை கைது செய்துள்ளனர்.

அம்பிலி முதலில் சீரியல்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவரை 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதைத்தொடர்ந்து சீரியல் நடிகர் ஆதித்யன் என்பவரை அம்புலி 2019ஆம் ஆண்டு காதலித்து, மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு குழந்தை 2 வயதில் உள்ளது. மேலும் ஆதித்யன் ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும், இதன் காரணமாக தன்னை கொடுமை படுத்துவதாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த ஆதித்தனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அவர் ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும்,  அம்பிலியையும் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.