Diwali: தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே இடங்களில் கூடும்போது பலவிதமான பிரச்சனைகள் நிகழலாம். அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், என அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் தேவை இல்லாமல் பல பிரச்சனைகள் ஏற்படும். இதுபோல் தேவையில்லாத பிரச்சனைகளை தடுக்கும் வகையில் நம் தமிழக அரசு 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி முக்கியமான இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், ரயில் நிலையங்கள், போன்ற பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. ஏன்னென்றால் பண்டிகையை முன்னிட்டு, வழக்கமான நேரங்களை விட கூடுதலாக இரவு நேரங்களில் மக்கள் வெளியே சென்று வருகின்றனர். இந்த நேரங்களில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.