41 பேரை அடித்தே கொலை செய்த போலீசார்.. நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

0
328
Police who beat and killed 41 people.. Nayanar Nagendran public accusation!!
Police who beat and killed 41 people.. Nayanar Nagendran public accusation!!

BJP DMK: சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஜய்யும் கட்சியை துவங்கியுள்ளார். இவர் தேர்தலில் களம் காண இருக்கிறார் என்று தெரிந்ததிலிருந்தே, அனைத்து ஊடகங்களிலும் இது தலைப்பு செய்தியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளார்.

தனது ஆறாவது பிரச்சார பயணத்தை கரூரில் மேற்கொண்ட விஜயை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், பாதிக்கப்பட்டவர்களை காண சென்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்றும், புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய விஜய், விரைவில் அவர்களை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால் அவர்களை சந்திப்பதற்கான முதல் நடவடிக்கையை எடுத்த விஜய், பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நயினார், கரூரில் 41 பேரை போலீசார் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். விஜய் கரூர் சென்றிருந்தால், அவரின் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது. அவரையும் அடித்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 41 பேருக்கு நடந்தது விஜய்க்கு நடக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக தான் பொறுப்பு என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதற்கு முன் ஒரு முறை அண்ணாமலை, விஜய் கரூர் செல்வதற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு, தனியாக கூட செல்லலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நயினாரின் இந்த கருத்து, பாஜக கட்சிக்குள்ளேயே விஜய்யை ஆதரிப்பதில் சிக்கல் உள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் நயினார் நாகேந்திரன் மாற்றி மாற்றி பேசுவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Previous articleபுரட்சி தமிழரின் தலைமைக்கு நோ சொல்லிய விஜய்.. நானே ராஜா நானே மந்திரி ரூட்டில் பயணிக்கும் தவெக!!
Next articleஅரசியல் அனுபவம் இல்லாத தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்.. உங்களுக்கும் ஆதவ் அர்ஜுனா நிலைமை வர கூடாது!!