பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்!

Photo of author

By Sakthi

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்!

Sakthi

Updated on:

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் போன்றவர்களை ஒரு புதூர் பாலியல் பலாத்காரம் செய்து காணொளி எடுத்த விவகாரம் மாநிலத்திலேயே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இந்த பாலியல் வழக்கில் வசந்தகுமார், மணிவண்ணன், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், போன்ற நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

அந்த கும்பலால் பாதிப்படைந்த மூன்று பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, இந்த வழக்கில் இதுவரையில் எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சம்பவத்தில் கோவை நீதிமன்றத்தில் மற்றும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக இன்னும் பல நபர்கள் இந்த வழக்கில் சிக்கலாம் என்று தெரிகின்றது.

இந்த வழக்கில் வாக்குமூலம் கொடுக்கும் பெண்கள் விவரமானது ரகசியமாக வைக்கப்படும் காரணத்தால், அந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்ச்சியாக வாக்குமூலம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை தற்சமயம் தீவிரமாகி இருக்கிறது. அதோடு புகார் கொடுத்த அந்தப் பெண் தன்னை பலாத்காரம் செய்ததாக மேலும் ஒரு சில நபர்களின் பெயர்களை நீதிபதியிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகின்றது. அதனை அடிப்படையாக வைத்து இப்பொழுது விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. ஆகவே இந்த பாலியல் வழக்கில் இன்னும் பலர் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சிபிஐ தெரிவிக்கிறது.