பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் புதிய வசூல் சாதனை!!

0
212
#image_title
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் சாதனை!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல்  செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான 11 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் இணைந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.