தேர்தல் ஆணையத்தின் முடிவால் கதறும் எதிர்க்கட்சிகள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு இருக்கின்றது இப்பொழுது தொற்றுக்காலம் என்ற காரணத்தால் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது அதில் ஒன்றாக 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கும் சலுகையை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடி மக்களின் வீடுகளுக்கு நேரிலேயே சென்று வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் இதே முறை பின்பற்றப்பட்டது ஆனால் இறுதியாக ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தபால் வாக்குகள் தான் தீர்மானம் செய்தனர் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 15 தொகுதிகளை பாரதிய ஜனதா கூட்டணி இடம் ஆர்ஜேடி கூட்டணி பறிகொடுத்தது ஆகவே தேர்வு நடத்தும் அதிகாரி நேரடியாக வீட்டிற்கு சென்று வாக்குகளை பெறும் இந்த முறைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

தேர்தல் நடத்தும் அரசு அதிகாரிகள் அதிகாரிகள் உடைய பேச்சை கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் என்று  13.78 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள் இவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது இதற்கு திமுக போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.

இதுகுறித்து தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் ஒன்றை கொடுத்திருக்கிறார் அதில் மாற்றுத்திறனாளி மற்றும் மூத்தக்குடிமக்களுக்கென தனியாக வாக்குச்சாவடி அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பதினான்கு தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது ஆகவே எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எதிர்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என தெரிவிவிக்கப்பட்டிருக்கின்றது.