மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

0
39
#image_title

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!!

மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

பலத்த சேதத்தை ஏற்படுத்திய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. நகரன் முக்கிய பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து தரை மட்டம் ஆகியுள்ளது. கட்ட இடிபாடுகளில் சிக்கி 296க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்ட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மொராக்கோவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மொராக்கோ நாட்டின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க்கின் ரிக்டர் அளவு கோளில் 7 ஆக பதிவானது என்று தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது. 19 நிமிடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.9ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

யுனஸ்கோவின் உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய தளமான மராகேச்சில் பழைய நகரத்தை சுற்றியுள்ள சிவப்பு சுவர்களின் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அங்கிருந்து வெளிவரும் வீடியோக்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகின்றது. திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுற்றுலா பயிணிகள் அனைவரும் அனைவரும் அங்குள்ள உணவகங்களை காலி செய்யும் வீடியோக்களும் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது. நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் ஆண்களும் பெண்களும் தங்களின் வீடுகளுக்கு செல்லாமல் தெருக்களில் தங்கியுள்ளனர்.