ஒரு சில பெண்கள் மட்டுமே தங்க நகைகளின் மீது அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இந்த உலகத்தில் அதிகபட்ச பெண்கள் தங்க நகைகளை விரும்பி அவர்களுக்கு தேவையான அனைத்து ஆபரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்வர். ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக அந்த நகைகளை அடகு வைக்க வேண்டியுள்ளதால் அதனை அடகு கடையில் வைத்து விடுகின்றனர். வாய்ப்புகள் கிடைத்தால் அதனை ஒரு சிலர் விரைவில் மீட்டு விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், உழைத்தாலும் அந்த நகைகளை மீட்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.
நகையின் மீது விருப்பம் இல்லாதவர்கள் கூட நகையின் மீது முதலீடு செய்து அதனை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது நமது குடும்பத்தின் இக்கட்டான சூழ்நிலைகளில் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஆபத்துக் காலங்களில் உதவக்கூடியது இந்த தங்க நகைகள் மட்டுமே.
இவ்வாறு முதலீடு செய்து வாங்கி வைத்த பல பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களது நகைகளை அடகு கடையிலோ அல்லது வங்கியிலோ வைத்து விடுகின்றனர். ஆனால் திரும்ப எவ்வளவுதான் முயன்றாலும் ஒரு சிலருக்கு அந்த கடனை அடைக்கவே முடியாமல் போய்விடுகிறது. வருடா வருடம் வட்டி மட்டுமே கட்டும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது என எண்ணுபவர்கள் இந்த பரிகாரத்தினை முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் செய்தால் நிச்சயம் அடகு வைத்த தங்க நகைகளை மீட்க முடியும்.
இந்த பரிகாரத்தினை வெள்ளிக்கிழமை நாட்களில் நம்மால் எந்த நேரத்தில் முடியுமோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். ஏனென்றால் வெள்ளிக்கிழமை ஆனது மகாலட்சுமி தாய்க்கு உகந்த நாள். எனவே வெள்ளிக்கிழமை முழுவதும் எந்த நேரத்தில் நம்மால் முடியுமோ அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தினை செய்து கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை நாளன்று காலையில் புதியதாக ஒரு கல்லுப்பு பாக்கெட்டினை வாங்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் வைத்திருக்கும் அதாவது சமையலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உப்பினை பயன்படுத்தக்கூடாது. ஒரு கண்ணாடி பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பவுலின் உள்ளே மஞ்சளை பூசிக்கொள்ள வேண்டும். அது உலர்ந்த பிறகு நாம் வாங்கி வைத்துள்ள உப்பினை கீழே சிந்தாமல் கொட்ட வேண்டும். கண்ணாடி பவுல் இல்லாதவர்கள் மண்ணாலான பவுலினை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில்வர் போன்ற வேறு எந்த பவுலினையும் பயன்படுத்தக் கூடாது.
உப்பினை கொட்டிய பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் குங்குமத்தினை தூவி விட வேண்டும். மஞ்சள் ஆனது சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மஞ்சளாக அல்லாமல் பூஜைக்கு என வாங்கக்கூடிய மஞ்சளாக இருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றினை வைத்து அதனுடன் ஒரு குண்டுமணி அளவாவது ஒரு சிறிய தங்கத்தினையும் உள்ளே வைக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தினை செய்யும் பொழுது நமது பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றிவிட்டு செய்வது சிறப்பை தரும். அதன் பிறகு அந்த பவுலினை நாம் நகை அல்லது பணம் வைக்கக்கூடிய இடத்தில் ஒரு மூன்று நாட்கள் வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தினை வெள்ளிக்கிழமை செய்வோம் என்றால் ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த பவுலினை எடுத்து அதில் உள்ள தங்கம் மற்றும் நாணயத்தை நகை வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். அதன் பிறகு பவுலில் உள்ள உப்பினை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.
இவ்வாறு அந்த உப்பினை கரைப்பதன் மூலம் நமது தோஷமும் கரைந்து விடும். இந்த பரிகாரத்தினை முழு நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் செய்யும் பொழுது நமது நகையானது நம்மிடம் வந்து சேரும்.